Windows 7 இற்கான பேஸ்புக்கின் Chat messanger (Official) - புதினம்

Breaking

புதிய தொழில்நுட்பத் தகவல்கள் விரைவாக தமிழில்............

Saturday, December 31, 2011

Windows 7 இற்கான பேஸ்புக்கின் Chat messanger (Official)


சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800 மில்லியன் வாசகர்களை கொண்ட மிகப்பெரிய சமூக இணையதளம்.இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.
Chat messanger மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணணியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம் மற்றும் உடனுக்குடன் notifications காணலாம்.
இந்த மென்பொருளை Windows 7 கணணிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது Facebook நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது.
இதற்கு முதலில் இந்த Facebook Messenger Linkல் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்கம் ஆகி முடிந்ததும் உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும், அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்கள் நண்பர்களில் ஓன்லைனில் இருப்பவர்களை இந்த மென்பொருள் காட்டும். அதில் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம் மற்றும் ஒரே விண்டோவில் பல பேருடன் அரட்டை அடிக்கும் வசதியும் இதில் உள்ளது.