Social Icons

Pages

MP3 பிளேயரால் ஏற்படும் ஆபத்துகள் !!!


வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது இசையை ரசிக்க அனைவரும் அதற்கு மாறினர்.
மிகத் துல்லியமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால் பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர்.

Cloud Storage: கூகுளின் புதிய வசதி

Cloud Storage என்ற தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் நம்முடைய கோப்புகளை ஓன்லைனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

தாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்!


ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு தொழில் நுட்பத்தில் புதுமை வரவிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிம்கார்டு தொழில் நுட்பத்தை முடிவெடுப்பதில் ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களிடையே இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான புதிய சிம்கார்டு தொழில் நுட்பம் நானோ சிம்மாக இருக்கும் என்று தெரிகிறது.

ASUS நிறுவனத்தின் புதிய வெளியீடு Eee Pad Transformer Prime TF201 ASUS நிறுவனமானது Eee Pad Transformer Prime TF201 எனும் பெயரில் புதிய Tablet PC ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது! இது  AndroidTM 4.0 இனைப்பயன்படுத்தி இயங்குகின்றது! அத்துடன்  NVIDIA® Tegra® 3 Quad-core CPU  இனைப்பயன்படுத்தி இயங்கும் முதல்  Tablet PC  ஆகவும் விளங்குகின்றது!

மறந்த WiFi Network இன் கடவுச் சொல்லை மீட்பதற்கு!


அலுவலகம், கல்லூரி அல்லது ஒரு பொது இடத்தில் WiFi பயன்படுத்த விரும்பும் போது அதன் கடவுச்சொல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதை நாம் மறந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம் என்று உதவுகிறது இந்த Wireless Key View என்ற மென்பொருள்.
முதலில் Wireless Key View என்ற இந்த  மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள். முக்கியமாக நீங்கள் எந்த இணைப்பிற்காக கடவுச்சொல்லை தேடுகிறீர்களோ அந்த இணைப்பில் இருக்க வேண்டும்.(Wi-Fi Area உள்ளே இருக்க வேண்டும்).

Samsung நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy Note


இது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ஓர் Android கையடக்க தொலைபேசியாகும். இது  Android  2.3.5 இல் இயங்குகின்றது!   அத்துடன் உள்ளீட்டு கருவியாக S Pen (Advanced smart pen) ஒன்றும் வழங்கப்படுகின்றது! இது ஏறத்தாள ஓர் Tablet PC இன் செயற்பாட்டை ஒத்துள்ளது!

Google Chrome இன் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு


போட்டி என்று எடுத்துக் கொண்டால் குரோம் பிரவுசரை மிஞ்சிட யாரும் இல்லை என்று சொல்லும் வகையில் கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு 16 இனை வெளியிட்டுள்ளது.
அதிக கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன் அனைத்து நவீன இணையத் தொழில்நுட்பத்தினையும் இணைத்து செயல்படுவது இதன் முதன்மைச் சிறப்பாக உள்ளது. பயர்பொக்ஸ் பிரவுசரின் சில நுண்ணியமான செட்டிங்ஸ் அமைப்பு இதில் இல்லை என்றாலும், புதிய தொழில் நுட்பங்களான நேடிவ் கிளையண்ட்(Native Client) மற்றும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இயங்குவதில் சிறந்த பிரவுசராக இது விளங்குகிறது.

விரைவில் அறிமுகமாகவிருக்கும் புதிய i PAD


எத்தனை வதந்திகள் வந்தாலும் அது ஆப்பிள் நிறுவனத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் ஆப்பிளின் ஐபேட் வாடிக்கையாளர்களை அவை மிக அதிகமாகவே பாதிக்கின்றன. குறைந்த காலத்திலேயே ஆப்பிள் உலக அளவில் மிகப் பிரபலமான நிறுவனம் ஆகும்.ஒவ்வொரு வருடமும் ஆப்பிளின் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இத்தகைய உயர்ந்த பெயரைப் பெற்ற இந்த ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி இப்போது ஏராளமான வதந்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்த வதந்திகளில் சில அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. தற்போது ஆப்பிளின் ஐபேட்களைப் பற்றி வந்திருக்கும் வதந்தி சற்று ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த வதந்திகளை இணையத்தளங்கள் விடாமல் பரப்பி வருகின்றன.
அதாவது புத்தாண்டில் ஐபேட்களுக்கான ஆப்பிளின் புதிய திட்டங்களைப் பற்றி இந்த வதந்திகள் வருகின்றன. டிஜிடைம்ஸ் கூறும் போது வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடக்கும் மேக் வேர்ல்டு அல்லது ஐ வேர்ல்டு கான்பரன்சில் வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெற இருப்பதாகக் கூறுகிறது. டிஜிடைம்ஸின் கூற்றுப்படி ஆப்பிள் ஐபேடு 2 எஸ் என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபேட் 3 மற்றும் நடுத்தர டேப்லெட்டுகளை புத்தாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கிறது.
ஜனவரி மாதம் 2010ம் ஆண்டில் ஆப்பிள் தனது முதல் ஐபேடை அறிமுகப்படுத்தியது. அதுபோல் ஆப்பிள் ஐபேட் 2 மார்ச் மாதம் 2011ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது திடீரென்று ஒரு புதிய ஐஒஎஸ் டேப்லெட் ஸ்டீவ் ஜாப் அவர்களின் பிறந்த தினம் அன்று அறிமுகப்படுத்துகிறது என்ற வந்திருக்கிறது.
மேலும் ஆப்பிள் ஐபேடு 2 டேப்லெட்டின் விலையைக் கணிசமான அளவில் குறைக்க இருக்கிறது. அதன் மூலம் அமேசான் கின்டில் பயர் ஆன்ட்ராய்டு டேப்லெட்டுடன் போட்டி போட முடியும் என நம்புகிறது. ஏனெனில் இந்த சீசனில் கின்டில் பயரின் விற்பனை ஐபேடின் விற்பனையத் தாண்டி இருக்கிறது.
மேலும் ஆப்பிளின் வரவிருக்கும் புதிய ஐபேடுகள் 2048 x 1536 பிக்சல் ரிசலூசன் கொண்டிருக்கும் ரெட்டினா டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கும் என்ற வதந்தி வருகிறது. இது தற்போதைய ஐபேட்களை விட 4 மடங்கு அதிகமான சக்தியாகும். மேலும் டபுள் எல்இடி லைட் பார் கொண்டிருப்பதால் புதிய ஐபேட்களின் டிஸ்ப்ளே மிகவும் பளிச்சென்று இருக்கும். மேலும் இந்த புதிய மாடல்கள் ரிசலூசனைக் கொண்டிருக்கும் என்ற செய்தியும் வருகிறது.