தாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்! - புதினம்

Breaking

புதிய தொழில்நுட்பத் தகவல்கள் விரைவாக தமிழில்............

Tuesday, April 3, 2012

தாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்!


ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு தொழில் நுட்பத்தில் புதுமை வரவிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிம்கார்டு தொழில் நுட்பத்தை முடிவெடுப்பதில் ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களிடையே இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான புதிய சிம்கார்டு தொழில் நுட்பம் நானோ சிம்மாக இருக்கும் என்று தெரிகிறது.


ஐரோப்பியன் டெலிகம்யூனிகேசனஸ் ஸ்டேன்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (இடிஎஸ்ஐ) கூறும்போது இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பத்திற்கான வாக்கெடுப்பு வரும் மே மாதம் வரை இருக்காது என்று கூறுகிறது.
இந்த வாக்கெடுப்பு தள்ளிப்போனதற்கான காரணம் பல நிறுவனங்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதாகும்.

ஏனெனில் ஆப்பிள், மோட்டோரோலா மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு என்ற சொந்தமான தொழில் நுட்பங்களை வைத்திருக்கின்றனர். அதனால் இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பத்தை அந்நிறுவனங்கள் ஏற்க சில காலம் ஆகும் என்று தெரிகிறது.
வழக்கமாக சிம் கார்டுகள் வாடிக்கையாளர்களின் போன் எண்களை சேகரித்து வைத்திருக்கும். ஆனால் இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பம் மேலும் பல தகவல்களை சேமித்து வைக்கும்.
இந்த புதிய நானோ சிம் கார்டு தொழில் நுட்பம் வர சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.